2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட இந்து எழுச்சி மாநாடு

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சி.அன்சார்)

அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் ஏற்பாடு செய்துள்ள "அம்பாறை மாவட்ட இந்து எழுச்சி மாநாடு" இம்மாதம் 22ஆம், 23ஆம், 24ஆம் திகதிகளில் அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தர் மாணவர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான வே.
சந்திரசேகரம் தலமையில் இடம்பெறவுள்ளது.

முதலாம் நாள் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் இந்து சமயம், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களைக் கற்கும் மாணவர்களும், இப்பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்து கொள்வர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும், பாடசாலைகளில் சைவ சமயம், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களை கற்பிக்கும் அசிரியர்களும் கலந்துகொள்வர்.

மூன்றாம் நாள் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் அறங்காவலர்களும், ஆலய குருமார்களும் கலந்து கொள்வர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .