2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மாளிகைக்காடு ஆசிரியர்களுக்கு திடீர் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் பணிப்புரையின் பேரில் காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியர்களுக்கான திடீர் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிநெறியொன்று இன்று அல் ஹுசைன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது இப்பாடசாலை முற்றாக அழிவடைந்ததுடன் இப்பாடசாலையில் கல்வி கற்ற 56 மாணவர்களின் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.

அனர்த்தமொன்று ஏற்படும் போது ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இதன்போது வளவாளர்களினால் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .