2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி

Super User   / 2010 நவம்பர் 13 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பு  திருக்கோவில் செயலகப்பிரிவில் உள்ள தங்கவேலாயுதபுரம் சாகாமம் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை  ஓக்ஸ்பாம் நிறுவனத்தின் அமுலாக்கத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலங்கை வங்கி,  ஹற்றன் நஷனல் வங்கிகள் மூலம் 54 விவசாயிகளுக்கு 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  மீள்செலுத்தும்  கடன்களை தங்கவேலாயுதகுரம் சாகாமம் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தங்கவேலாயுதபுரத்தில் இலங்கை வங்கி மூலம் 29 பேருக்கு 4 இலட்சம் 25 ஆயிரம் ரூபாவையும் சாகாம பிரதேசத்தில் ஹற்றன் நஷனல் வங்கி மூலம் 25 பேருக்கு 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.

இந்நிநழ்வுகளின் அதிதிகளாக இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் இ.யேந்துரா திருக்கோவில்  இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம்.சபூர் ஹற்றன் நஷனல் வங்கி  திருக்கோவில் கிளை முகாமையாளர் ரி.ரவிசந்திரன் கடன் திட்ட உத்தியோகத்தர் எஸ்.நித்தியகுமார் சுவாட் அமைப்பின் பணிப்பாளர் கே.பிரேமலதன் திட்ட பணிப்பாளர் எஸ்.லோகிதன் ஒக்ஸ்பாம் புடீ  நிறுவன மட்டு அம்பாறை பணிப்பாளர் எம்.யோகேஸ்வரன்  திட்ட பணிப்பாளர் எஸ். ரகுராமமூர்த்தி  ஊ.ஐ.ஊ கம்பனி உத்தயோகத்தர் கிராம சேவகர் மற்றும் பலரும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி வைத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .