Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்றிலிருந்து வியாபார நோக்கமாக வர்த்தகர்கள் சிலரை ஏற்றிக் கொண்டு கம்பளை நோக்கிச் சென்ற வான் விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமுற்ற நிலையில் உடுதும்பர வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அக்கரைப்பற்றிலிருந்து நேற்று புறப்பட்ட இந்த வான் மஹியங்கன – கண்டி வீதியில் ஹுன்னஸ்கிரிய என்ற இடத்தில் அதிகாலை 4.30 மணியளவில் 30 அடி பள்ளத்தில் விழுந்தே விபத்துக்குள்ளானது.
வர்த்தகர்கள் ஐவரும் கம்பளையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு வியாபார நோக்கமாக சம்பவ தினத்திற்கு முதல் நாள் சென்று மீண்டும் வீடு திரும்புகையிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
விபத்தின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வான் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேனக ஜயசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .