2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புதையல் தோண்டிய ஐவர் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

பொத்துவில் தொகுதியின் கோமாரி காட்டு பகுதியிலிருந்து புதையலொன்றை அகழ்ந்து கொண்டிருந்த 5 சந்தேக நபர்களை இன்று காலை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படை வீரர்கள் காட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொத்துவில் நீதி மன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--