2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கூட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எம்.எஸ்.எம்.ரம்ஸான்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இவ்வருடத்திற்கான இறுதி கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெறவுள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷனம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் 2011ஆம் ஆண்டிற்கான புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் அமைப்பின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள உறுப்பினர்களாக கொண்ட பாரிய அமைப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--