2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கிய பாண்டிருப்பு குடியிருப்புக்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தின் வீடுகள், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் பாண்டிருப்பு மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாண்டிருப்புப் பிரதேசத்தின் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பாண்டிருப்பு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் முன்னாலுள்ள பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து ஆலயத்துக்குள்ளும் நீர் பரவியுள்ளது.

இது இவ்வாறிருக்க பாண்டிருப்பு, மேட்டுவட்டைப் பகுதியிலுள்ள சுனாமியால் இடம்பெயர்ந்தோர் வசித்து வந்த வீடுகளும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--