Menaka Mookandi / 2011 ஜனவரி 13 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட், எம்.எம்.ஜெஸ்மின்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகஸ்தர்கள் இன்று காலை பணிப் பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் ஒருவர் - நோயாளியொருவருடன் வந்திருந்த நபரொருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், தமது பாதுகாப்பினை உறுதி செய்யக் கோரியுமே இவர்கள் இந்தப் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாதி உத்தியோகத்தர் ஒருவரை நேற்று முன்தினம் நோயாளியொருவருடன் வந்திருந்த நபரொருவர் தாக்கியதாக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தாக்கியதாகக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து, நீதிமன்றம் சந்தேக நபரைப் பிணையில் விடுதலை செய்திருந்தது.
ஆயினும், கடமை நேரத்தில் தமது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு கோரியும், மேற்படி தாக்குதல் சம்பவத்துக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையிலுமே - தாதியர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, தாதியர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாளைய தினம் வைத்தியசாலை நிர்வாகமும், பொலிஸாரும் உறுதி மொழியொன்றினை வழங்குவதாகத் தெரிவித்ததையடுத்து – நண்பகலளவில் தமது பணிப்பகிஷ்கரிப்பிலிருந்து தாதியர்கள் விலகிக் கொண்டதாகத் தெரியவருகிறது.
.jpg)
.jpg)
31 minute ago
37 minute ago
55 minute ago
2 hours ago
mubarak Saturday, 15 January 2011 05:31 AM
தங்களின் செய்திகளில் தகவல் தெளிவின்மையுடன் சில முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டும் இருப்பது குறித்து அதிருப்தியடைகிறேன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
55 minute ago
2 hours ago