Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
சாய்ந்தமருது பிரதேச மக்களின் நன்மை கருதி சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தில் ஒரு நாள் மகப்பேற்று மருத்துவ சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.டி.இப்றாஹிம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் உட்பட வைத்தியசாலை அபிவிருத்தி குழுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது வைத்தியசாலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு மகப்பேற்று நிபுணர் ஒருவரின் அவசிய தேவை கருதி, வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை கல்முனை அஷ;ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணரை விடுவித்து சேவை வழங்க சபையில் இணக்கம் தெரிவித்தார்.
மேற்படி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago