2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கல்முனை மின்சாரசபை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)   

கல்முனை பிராந்திய மின்சார சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும்,   தாக்கியவரை உடன் கைதுசெய்யுமாறு கோரியும் இன்று கல்முனை மின்சாரசபை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மின்சார சபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

மின்சாரசபையின் மாணி வாசிப்பாளராக கடமையாற்றும் ஏ.சப்லி அஹட் என்பவர்,  நேற்று சம்மாந்துரை பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது வீட்டு உரிமையாளர் ஒருவரால் தாக்கப்பட்டார்.

தாக்கிய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அந்நபரை உடனே கைதுசெய்ய கோரியும், மின்சாரசபை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கல்முனை பிராந்திய மின்சாரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--