2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கல்முனை வடிகான் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 04 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதான வீதியின்; இரு மருங்கிலும் அமைந்துள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தினை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

வடிகான்களை அமைத்து முறையாக அதற்கு மேல்மூடி போடாமையால் மண் மற்றும் குப்பைக்கூழங்கள் நிறைந்து இறுகிப் போனமையால் நீர் ஓடாது தேங்கி துர்நாற்றம் வீசியதோடு கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்திருந்தது.

தற்போது இப்பகுதியில் திடீரென சில மணி நேரம் மழை பெய்தாலும் வீதியில் வெள்ள நீர் பரவுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .