Freelancer / 2026 ஜனவரி 08 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்கும் இடையில் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பகுதியில் போக்குவரத்துக்காக படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல குளங்களில் நீர் நிறைந்த நிலையில், குளங்களின் வான் கதவுகள் அந்தந்த நீர் மட்ட அளவுகளுக்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளது.
அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, தும்பங்கேணி, றூகம், கட்டுமுறிவு, வாகனேரி, வெலிகந்தை, வடமுனை, புனானை, மாவடி ஓடை போன்ற குளங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உன்னிச்சை குளத்தின் இரு வான் கதவுகள் 3 அடிக்கும் ஒரு வான்கதவு 4 அடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன
குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து அந்த குளங்களை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. R
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago