Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 08 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலையொன்றின்; அதிபர், ஆசிரியர்கள் உரிய நேரத்துக்குச் பாடசாலைகளுக்கு சமுகமளிக்காமை தொடர்பில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம், திடீரென அப்பாடசாலைக்கு விஜயம் செய்தபோது, ஆசிரியர்களும் அதிபரும் உரிய நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்காததை அவதானித்த பின் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்து விட்டு, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வருகைக்காக காத்திருந்துள்ளார்.
அச்சமயத்தில் கட்டுறு பயிலுநர்களாகக் கடமையாற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியட் கல்லூரி மாணவர்கள் மட்டுமே மேற்படி பாடசாலையில் கடமையில் இருந்துள்ளனர்.
அச்சமயம், குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் எவரும் அங்கிருக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
51 minute ago
55 minute ago
Saleem Ramees Thursday, 09 June 2011 02:55 PM
எப்படி கல்வி அபிவிருத்தி காண்பது? இப்படியானவர்கள் யார் என்றாலும் உடன் இடமாற்றம் செய்யவேண்டும். (பொத்துவில்/சம்மாந்துறை/இறக்காமம்/கல்முனை)
Reply : 0 0
Mohd rizvi -Qatar Thursday, 09 June 2011 05:02 PM
இட மாற்றம் செய்தால் திருந்திவிடுவர்களோ. இவர்களை தண்ணி இல்லாத இடங்களுக்குத்தான் மாற்றனும்.
Reply : 0 0
siraj Monday, 13 June 2011 07:14 PM
இந்த ஸ்கூல் மட்டுமா? இப்படி இன்னும் எவளோ இருக்கு அதையும் பாருங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
51 minute ago
55 minute ago