2021 மே 10, திங்கட்கிழமை

கல்முனையில் அஷ்ரபின் ஞாபகார்த்த தின நிகழ்வு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11ஆவது ஆண்டு நினைவு தின பல்வேறு நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் அவரது காரியாலயத்தில் கத்தமுல் குர்ஆன் ஓதலும் உணவு வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முதன்மை வேட்பாளருமான நிஸாங் காரியப்பரின் தலைமையில் அதேநிகழ்வுகளுடன் சுனாமியினால் பாதிக்கப்பட்டு தற்போது நிரந்தர வீட்டுத்திட்டத்தில் வாழும் பல குடும்பங்களுக்கு தானம் வாழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இத்தினத்தையொட்டி இன்று மாலை கல்முனை பிரதான வீதியில் தலைவரின் இல்லத்திற்கு முன் நிஸாங்காரியப்பரின் தலைமையில் தலைவரின் ஞாபகார்த்த உரைக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0

 • m.i.samsudeen Friday, 16 September 2011 09:07 PM

  தேர்தல் வந்தால்தான் எல்லா நினைப்பும். பத்தாவது நினைவு தினத்துக்கு என்ன நடந்தது சீமான்களே.

  Reply : 0       0

  SLMC Monday, 19 September 2011 05:06 AM

  அவருக்கு அல்லாஹ்விடத்தில் துஆச் செய்வதை விட்டு விட்டு அவர் பெயரால வயிறு வளர்க்கிறீர்களா?

  Reply : 0       0

  rakkish. Saturday, 17 September 2011 05:54 PM

  மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு எங்களுடைய பிரார்த்தனைகள் என்றும் உண்டு.. அவரது இறப்பு வருட தினங்களில் மாத்திரம் அல்ல.. அவர் கட்சியை விட்டுச் சென்ற இடத்தை அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் திரும்பி பார்க்க வேண்டும்.. ஏதாவது முன்னேற்றம்?? வளர்த்து கொடுத்த கட்சியை சிதைத்து விட்டு நினைவு நாட்கள்???

  Reply : 0       0

  rozan Saturday, 17 September 2011 10:07 PM

  ஒவ்வொரு செப்டம்பரும் தேர்தல் வரணும்....... அப்பத்தான் கத்தம் ஓதமுடியும் ............ இவர் தானம் செய்து காசு செலவு செய்து இருக்கிறார்.......மை கோட் .....

  Reply : 0       0

  mcafareed Saturday, 17 September 2011 10:16 PM

  இப்போதுதான் சுனாமி வீட்டுத்திட்டம் எல்லாம் ஞாபகம் வருகிதுபோல, அடிக்கடி தேர்தல் வந்தால்தான் சரிபோல.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X