2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கல்முனை மேயர் சிராஸ் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது கடமைகளை கல்முனை மாநகர மேயர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

கல்முனை மக்கள் வங்கி சந்தியிலிருந்து கல்முனை மாநகர சபை வரை மேயர் சிராஸ் வரவேற்கப்பட்டார்.

கல்முனை மாநகர சபைக்கு வந்த புதிய மேயரை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி வரவேற்றதுடன் புதிய மேயரால் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனினும், இந்நிகழ்வில் கல்முனை பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஹகீப், நிசார்தீன் பஸீர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். றியாஸ் மற்றும் எம்.மூபீத் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.


  Comments - 0

 • kulathooran Wednesday, 19 October 2011 11:05 PM

  இன, சமூக,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அவரது சேவையும் அமைய வாழ்த்துவதுடன், மாநகரின் தென் எல்லை கேட் வே (Gate Way)ல் 'கல்முனை மாநகர் வரவேற்கிறது' என்பதுடன் வடக்கு எல்லையிலும் கேட் வே அமைத்து மாநகர நிருவாக பகுதிகளை வரையறை செய்ய வேண்டி சக உறுப்பினர்கள் ஒத்துழைப்பையும் பெற யாசிக்கிறேன்.

  Reply : 0       0

  Khaleel Thursday, 20 October 2011 01:13 AM

  Puthiya Meyar Ziraz nalla muraiil sevai puriya emadu wallthukkal.

  Reply : 0       0

  kalaimahel hidaya risvi Thursday, 20 October 2011 02:37 PM

  கல்முனை மா நகர் முதல்வரின் சேவை இன, மத, சமூக, பிரதேச வேறு பாடுகளுக்கு அப்பால் அவர்களது சேவை அமைய எனது வாழ்த்துக்கள். அவரது ஆயுளை இறைவன் நோய்களின்றி அதிகரிக்க வைப்பானாக ..!

  Reply : 0       0

  maazeen Thursday, 20 October 2011 04:07 PM

  மே அல்மிக்ஹ்ட்டி அல்லா ப்ளேசஸ் யு.

  Reply : 0       0

  செம்பகம் Thursday, 20 October 2011 05:34 PM

  முதற்கோணம் முற்றிலும் கோணலாகாமல் புதிய மேயர் பார்த்துக் கொண்டால் சரியாக இருக்கும் என்ன!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X