Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
விவசாய அமைச்சின் 'வளமான மண்ணில் வளமான தேசம்' எனும் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச விவசாயிகளுக்கு கூட்டெரு தயாரிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கும், செய்முறை பயிற்சியும் இன்று புதன்கிழமை சம்மாந்துறை கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இங்கு பிரதேசத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய கிளிரிசீடியா, புல், சாணம், கோழியெரு, வைக்கோல், வாழைப்பட்டை போன்ற தேசனப் பதார்த்தங்களை பயன்படுத்தி உயர்தரத்திலான கூட்டெருவினை உற்பத்தி செய்வது தொடர்பாக விவசாய போதனாசிரியர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில்; 65 விவசாயி அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பெருமபோக உத்தியோகத்தர் வை.ஏ.கபுர் தலைமையில் நடைபெறற் இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர்.லத்தீப், உதவி விவசாயப் பணிப்பாளர் பி.கே.முத்துக்குமார, மாகாண விவசாய போதனாசிரியர் எஸ்.எல்.றசீன், விவசாய அமைச்சின் விவசாய போதனாசிரியர் ஏ.மஜீட் உள்ளிட்ட விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
42 minute ago
1 hours ago
pasha Thursday, 20 October 2011 02:43 PM
ஆம் சம்மாந்துறை கூட்டெரு தயாரிப்பதற்கான சிறந்த இடம். பாதைகளில் காணப்படும் சாணம் இதற்கு பயன்படுத்தப்படலாம் . மேலதிக எருவை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் முடியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago