Suganthini Ratnam / 2011 நவம்பர் 16 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இரவு நேர காவல்க் கடமையில் ஈடுபட்டு வருகின்ற காவலாளியொருவர் இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோளாவில் பிரதேசத்தில் மூன்றாம் பிரிவு காளிக்குட்டி வீதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தன் பாலச்சந்திரன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவாரென அக்கரைப்பற்று பொலிஸார் கூறினர்.
மேற்படி நபர் நீண்டகாலமாக கோளாவில் பிரதேசத்திலுள்ள பெருநாவலர் வித்தியாலயத்தில் இரவு நேரக் காவலாளியாக கடமையில் ஈடுபட்டு வருபவரெனவும் அவ்வாறே நேற்று செவ்வாய்க்கிழமையும் இரவு நேரக் காவல் கடமைக்காக அவர் அப்பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணியாகியும் மேற்படி நபர் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் அவரைத் தேடி பாடசாலைக்குச் சென்று பார்த்தபோது வகுப்பறைக் கட்டடமொன்றில் மேற்படி நபர் சடலமாக கிடந்தார்.
பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவே சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026