2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கல்முனை மாநகர சபைக்கான முத்திரை வரி நிலுவையை வழங்க அனுமதி

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திறைசேரியினால் கல்முனை மாநகர சபைக்கு வழங்க வேண்டியிருந்த முத்திரை வரி  நிலுவையில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கினங்க 11 மில்லியன் ரூபா முத்திரை வரி நிலுவை காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கல்முனை மாநகர சபைக்கு 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான முத்திரை வரி 21 மில்லின் ரூபா திறைசேரியினால் வழங்க வேண்டியிருந்தது. இதில் ஒரு தொகையே தற்போது காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரின் முயற்சியினாலேயே குறித்த நிலுவை பணம் மாநகர சபைக்கு கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0

 • sifan Friday, 25 November 2011 04:55 AM

  இதற்கான நன்றியை ஆசியா மன்றத்திக்கு சொல்லுன்கோ.

  Reply : 0       0

  hameed Monday, 21 November 2011 10:18 PM

  வெல் டன்... நல்லே முன்மாதிரி இதுபோலே இணைத்து செயல்பட்டால் மாநகரம் முன்னேறும்.

  Reply : 0       0

  UMMPA Monday, 21 November 2011 11:06 PM

  கடந்த காலத்தில் இருந்த தம்பிக்கு இது தெரியாதோ ! இந்த காசுக்கு என்ன திட்டமிடல் இருக்கிறதோ ! நல்ல திட்டம் இருக்கும்போல.

  Reply : 0       0

  mubarak Tuesday, 22 November 2011 05:02 AM

  ellam mahinda arasangaththudan muslim congress sernthathanalthan kidaikirathu. kalmunaiil arasangam venrirunthal ithaivida appan velai seyyalam.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X