2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்கா தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பிரஜா பொறுப்பாளர் எஸ்.எம்.அமீர் நெறிப்படுத்தினார்.

இதன்போது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் போன்றன தொலைந்து போனமை பற்றி முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு பிரதிகள் வழங்கப்பட்டன.

பொலிஸ் சான்றிதழ்கள் வழங்குதல், பிறப்பு மற்றும் இறப்பு திருமண பதிவுகள் வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கள் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்பட்டன.

இந்நடமாடும் சேவையில்  கல்முனை உதவி பொலிஸ் அத்தியேட்சகர் மென்டிஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உதவி  பரிசோதகர் ஏ.சம்சுதீன், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .