2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

சுற்றாடல் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பாகவுள்ள  சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுக்கான சுற்றாடல் மீளாய்வு மற்றும் 2013 ஆம் ஆண்டு பாடசாலைகளில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள சுற்றாடல் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதி சுற்றாடல் பணிப்பாளர் எம்.ஏ.ஸி. நஜீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோயில், கல்முனை, சம்மாந்துறை அம்பாறை, மாகாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தக்கண்டிய போன்ற கல்வி வலயங்களைச் சேர்ந்த சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள், உதவி சுற்றாடல் ஆணையாளர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சுற்றாடல் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை பிராந்திய சுற்றாடல் இணைப்பாளர் எம்.புஸ்பகுமார, கல்முனை கல்வி வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி மற்றும் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோஸ்தர் எஸ்.உதயராஜன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .