2021 மே 12, புதன்கிழமை

மஹிந்தோதய ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஆர்.கே.எம் மகா வித்தியாலயத்தில்  மஹிந்தோதய ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அதிபர் திருமதி லோகநாயகி கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்துகொண்டார் .ஏனைய அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.குணபாலன், திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.ராசமாணிக்கம், கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் வீ.கணகரத்தினம் கலந்து கொண்டனர்.

80 இலட்சம் ரூபா செலவில்; 2 மாடிகளைக் கொண்டதாக இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .