Janu / 2026 ஜனவரி 07 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியுடைய "குஷ்" போதைப் பொருட்களுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் "கிரீன் சேனல்" வழியாக விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு, குடபாடுவ பகுதியில் சுற்றுலா விடுதியொன்றை நடத்திச் செல்லும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் குறித்த போதைப்பொருள் தொகைகை தாய்லாந்தின் பாங்காக்கில் வாங்கி இந்தியாவின் புது டெல்லிக்கு சென்று அங்கிருந்து புதன்கிழமை (07) காலை இந்தியன் ஏர்லைன்ஸ் AI-277 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் கொண்டு வந்த பைக்குள் இருந்து கார்பன் பேப்பரில் சுற்றப்பட்ட, 7 கிலோகிராம் 070 கிராம் "குஷ்" போதைப்பொருள் அடங்கிய 15 பொட்டலங்கள், அவர் கொண்டு வந்த இனிப்பு பாக்கெட்டுகளால் மறைத்துவைத்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் தொகை, அவருக்குத் தெரிந்த, தற்போது தாய்லாந்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரால் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

24 minute ago
41 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
41 minute ago
4 hours ago