2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, பொத்துவில் பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புக் கட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொத்துவில் றொட்டை வயல் பகுதியில் வேளாண்மைக் காவலுக்கு நின்றதாகக் கூறப்படும் 5 விவசாயிகளையே விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து,  றொட்டை வயல் பகுதியில் வேளாண்மைக் காவலுக்காக அமைக்கப்பட்ட வாடிகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புக் கட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்றியதுடன், 5 விவசாயிகளையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புக் கட்டுத்துப்பாக்கிகளுடன் விவசாயிகளை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

  Comments - 0

  • ibnuaboo Thursday, 03 January 2013 09:28 AM

    உள்ளுர் உற்பத்தி பொருள்களுக்கு ஊக்கமளிப்பதாக அரசாங்கம் தானே வாக்குறுதி அளித்தது. அதை நம்பி இப்படி செய்திருப்பார்கள். பன்றி காவலுக்கு ஏ.கே 47 ஆ பாவிக்க முடியும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .