2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மீன்வாடிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை, காரைதீவில் 15 மீன்வாடிகள் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்னவின் 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளன.
 
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சக்தி மீன்பிடி சந்தைப்படுத்தல் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும் அமைச்சரின் மீன்பிடித்துறை இணைப்பாளருமான நடராசா ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

'காரைதீவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயத்திற்கு இந்த உதவியாவது செய்யக் கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

மேலும் உங்கள் தலைவர்களான மூர்த்தி மற்றும் ஜீவராசா போன்றோரின் கரங்களை பலப்படுத்துங்கள' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--