2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வீட்டினுள் புகுந்த முதலை

Super User   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கல்முனை, பாண்டிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஐந்து அடி நீளமான முதலையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்துள்ளது.

வீட்டினுல் முதலை புகுந்ததமையினால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரதேசத்தின் பிரதான வீதியை அண்டி காணப்படும் குளமொன்றிலிருந்து இந்த முதலை வீட்டுக்குள் புகுந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முதலை விட்டினுள் புகுந்ததும் அவ்வீட்டில் வசிப்பவர்களும் வீட்டை சுற்றியுள்ளவர்களும் அச்சத்துடன் காணப்பட்டுள்ளனர். இந்த முதலை விவகாரம் கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் விரைந்து பொதுமக்களுடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X