2025 ஜூலை 05, சனிக்கிழமை

யானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 5ஆம் கிராமம் வீரத்திடலில் யானைகளின் தாக்குதலிலிருந்து பெண்ணொருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்வம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இப்பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் சுவர் வீழ்த்தப்பட்டு நெல்மூடைகளை எடுக்கப்படுவதை அவதானித்துள்ளார்.

இது காட்டு யானைகளின் செயற்பாடு என்பதை அறிந்த அப் வீட்டின் பின்கதவால் ஓடி உயிர் தப்பியுள்ளார்.

பின்னர் இச்சம்  தொடர்பாக சவளக்கடை பொலிஸார் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆகியோரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் தெருமின்விளக்குகள் இன்மையால் இரவு வேளைகளில் ஊருக்குள் நுழையும் யானைகள் எவ்விடத்தில் மறைந்து நிற்கின்றது என்பதை அறியமுடியாதுள்ளதாக பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .