2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சிங்கப்பூர் விஜயம்

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் இன்று சனிக்கிழமை அதிகாலை சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். 26வது ஆசிய சட்டத்துறை மநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் சிங்கப்பூரில் விஜயம் செய்துள்ளார்.

சிங்கபூர் சட்ட சமூகத்தின் ஏற்பாட்டில் ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மநாட்டில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்ப்பில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

'சட்டத்துக்கு அப்பால்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மநாட்டில் சிங்கப்பூரின் பிரதம நீதியரசர் சுந்தரஸ் மெனொன் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சன்முகம் உட்பட ஆசிய நாடுகள் பலவற்றின் சட்ட வல்லுனர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • sharafee rock Monday, 28 October 2013 06:06 AM

  ஆரிப் சட்டத்தரணி அவர்கள் உண்மைக்கும் பாராட்டக்கூடியவர் தான். ஏனென்றால் அவர் மாகாண சபை உறுப்பினர் ஆன பிறகு நிந்தவூருக்கு நல்ல சேவைகளை செய்துள்ளார்...

  Reply : 0       0

  VALLARASU.COM Monday, 28 October 2013 03:47 PM

  இப்படிபட்டவரை நிந்தவூர் மக்கள் நன்றிக் கண் கொண்டு பார்க்க வேண்டும். அட்டாளைச்சேனை மக்களைப்போல் இருக்க கூடாது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .