2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மது பிரியர்களுக்கு ‘மே’ அதிர்ச்சி

Editorial   / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


மே மாதத்தில் மூன்று நாட்கள் மதுபான சாலைகள் மூடப்படும்: மதுவரித் திணைக்களம் அறிவிப்பு
சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வெசாக்ப் பண்டிகையை முன்னிட்டு, மே மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை (மே தினம்) முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும், மே 30 ஆம் திகதி வெசாக்ப் பூரணை தினத்தை முன்னிட்டும், அதற்கு அடுத்த நாளான மே 31 ஆம் திகதியும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மகா நாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இம்முறை வெசாக்ப் பூரணை தினம் மே 30 ஆம் திகதி அனுசரிக்கப்படும் எனவும், மே 31 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை 'தேசிய வெசாக் வாரம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .