2021 மார்ச் 08, திங்கட்கிழமை

சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


இளம் வயதில் சாதனை படைத்த சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவும், தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதி அமைச்சர் ஏ.எல்.எம்.றிஸான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது.

இதன்போது கல்வி, விளையாட்டு, ஊடகம், சமூகசேவை போன்ற பல துறைகளில் இளம் வயதிலிருந்து சாதனைகள் படைத்த சாதனையாளர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த 250 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார், அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறூக், இளைஞர் வள நிலைய பொறுப்பதிகாரி ஐ.எம்.லத்தீப் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .