2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தை பார்வையிட அனுமதி

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  அஷ்ரப் ஞாபகார்த்த  நூலகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் நூலகர் எம்.எம்.றிபாயுதீன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையிலிருந்து (22) எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை  (23) வரை  பிற்பகல் 02 மணியிலிருந்து இரவு 10 மணிவரை  பொதுமக்கள் இந்த நூலகத்தை பார்வையிட முடியுமெனவும் அவர் கூறினார்.

200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இரு மாடிகளைக் கொண்டதாக நவீன  முறையில் நிர்மாணிக்கப்பட்ட நூலக கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (20) திறந்துவைத்தார்.

120,000 புத்தகங்களும் 1,200 இறுவெட்டுக்களும் 275 கல்விசார் பருவ வெளியீடுகள் உள்ளிட்ட பல வசதிகளையும் இந்த நூலகம் கொண்டமைந்துள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .