2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஒலிபெருக்கி வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறைப் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட உடங்கா -02ம் பிரிவிலுள்ள மஸ்ஸிதுல் ஸபூர் பள்ளிவாசலின் தேவைக்காக ஒலிபெருக்கி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) நடைபெற்றது.

மஸ்ஸிதுல் ஸபூர் பள்ளிவாசலின் நிர்வாகத்தினாரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரி ஐ.எல.எம்.மாஹிரின்  நிதியுதவியினால் இந்த ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அதிதிகளாக இலங்கை சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர், மஸ்ஸிதுல் ஸபூர் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் ஏ.ஏ.கபூர், பள்ளிவாசல் பேஸ்இமாம் மௌலவி எம்.ஏ.அஸ்வர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் கலந்த கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .