2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கலை, கலாசார போட்டிகளுக்கான பரிசளிப்பு

Thipaan   / 2014 ஒக்டோபர் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கம் நடத்திய கிழக்கு மாகாண முஸ்லிம் பாரம்பரியகலை, கலாசார போட்டிகளின் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

மாவட்டகலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், உதவி மாவட்ட செயலாளர் ஜி.வி.சின்தனஉதார நாணயக்கார, பிரதேசசெயலாளர் ஏ.எல்.எம்.சலீம், ஓய்வுபெற்ற உதவிப்பணிப்பாளர் மருதூர்; மஜீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது முதலாம் இடங்களைப் பெற்றகலை, கலாசார நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .