2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மத்திய செயலக காரியால திறப்பு விழா

Thipaan   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய செயலகக் காரியால திறப்பு விழா, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்;குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் சனிக்கிழமை(31)  இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீ.மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு காரியாலத்தை திறந்து வைத்தார்.

இந்தநிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அமைச்சுப் பதிவிகளுடன் மு.கா. தலைவர் முதன் முதலாக அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையால் ஆதரவாளர்கள் புடைசூழ மகத்தான வரவேற்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X