2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, ரிஷாத் விஜயம்

Thipaan   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நேற்று சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு உழைத்த மக்களுக்கு நன்றியினையும் பாராட்டயும் தெரிவித்தக் கொண்டார்.

இந்த விஜயத்தின் போது பிரபல தொழிலதிபர் லயன் சித்தீக் நதீரின் அழைப்பின் பிரகாரம் மத்திய முகாம், சவளக்கடை பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து மக்களின் குறைபாடுகள், தேவைகள் என்பவற்றை அறிந்து கொண்டார்.

இந்தப் பிரதேச மக்கள் எதிர் நோக்குகின்ற பள்ளிவாசல் பிரச்சினைகள், விவசாயப்பிரச்சினைகள், வீதிப்பிரச்சினைகள் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கும் முடியுமான வரையில் உதவி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எந்திரி சிப்லி பாறுக், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், தொழில் அதிபர் லயன் சித்தீக் நதீர், மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.ஏ.காதர், நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சு அதிகாரிகள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .