2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கடலில் நீராடிய சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, அறுகம்பைக்; கடலில் சனிக்கிழமை (15) மாலை நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதுவைச் சேர்ந்த முஹமட் சிபான் (வயது 07) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

தனது குடும்பத்தவருடன் பொத்துவிலுக்கு சுற்றுலா வந்து அறுகம்பைக் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சிறுவனின் சடலம் அறுகம்பை தோணாப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .