2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

'தேசத்தின் மகுடம்' மார்ச் 23ஆம் திகதி முதல் நடைபெறும்

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


தேசத்தின் மகுடம்-2013 கண்காட்சியின் பிரதான நிகழ்வு அம்பாறை ஹாடி தொழில்நுட்ப  கல்லூரியில் இடம்பெறவுள்ளது என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தெழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இந்த கண்காட்சி மார்ச் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு  கண்காட்சியை ஆரம்பித்து வைப்பார்.

எமது நாட்டின் சகல விடயங்களையும் பிரதிபலிக்கும் வகையில் சுமார் 2,000 காட்சிக்கூடங்கள் இந்த கண்காட்சியின்  நிறுவப்பட்டுள்ளது தற்போது இதன் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

எஞ்சியுள்ள வேலைகள் அனைத்தையும் துரிதமாக நிறைவு செய்யப்பட வேண்டும். அத்துடன் இந்த கண்காட்சியினை பார்வையிட வருகின்ற மக்களுக்கான சகலவிதமான வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக்குழு நிறைவு செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசத்தின் மகுடம் கண்காட்சி சுதந்திர தினதிற்கு பின்னர் நடத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி பெப்ரவரி 4 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக இந்த கண்காட்சி மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0

  • man Friday, 22 February 2013 06:26 PM

    இது மக்களுக்கு நன்மை பயக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X