Super User / 2011 ஜனவரி 11 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 336,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28,739 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் ஏ.எச்.எம். சியாத் தெரிவித்தார்.
வெள்ளத்தின் அளவு அதிகரித்துவரும் நிலையில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கல்முனை சம்மாந்துறை வீதியில் மாவடிப்பள்ளி தாம்போதியிலும், சம்மாந்துறை – நாவிதன்வெளி வீதியில் வீரமுனையிலும் கல்முனை நாவிதன்வெளி வீதியில் கிட்டங்கியிலும் வெள்ளம் பாய்வதால் அப்பாதைகளுடான போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.
இதேவேளை, உணவுப்பொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. பொருட்களின் கையிருப்பிலுள்ள பொருட்கள் விரைவல் முடிவடைந்துவிடும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
7 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago