2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 7 பேர் கல்முனையில் கைது

Super User   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

கல்முனை பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட ஏழு பேரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இவர்கள்  கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட நிலையியே நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது முகவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் கார் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஏழு பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் கல்முனை நகரிற்கு பஸ்களில் வந்து இறங்க எங்கு செல்வது என தெரியாது நடமாடியுள்ளனர்.

இந்த தகவல் கல்முனை பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்ததையடுத்து இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பும் முகவர்கள் கல்முனை நகரில் வந்தடைந்ததும் அழைத்துச் செல்வதாகவும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முகவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த நபர்களை கூட்டிச்செல்லுமாறு கூறியதையடுத்து முகவர்கள் காரிலும் ஆட்டோ ஒன்றையும் எடுத்துக்கொண்டு கல்முனை பஸ் நிலையத்திற்கு வந்தபோது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X