Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நடைபாதைகளில் வியாபாரம் மேற்கொண்டு வந்த எட்டுப் பேருக்கு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். றிஸ்வி தலா நூறு ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். மென்டிசின் உத்தரவின் பேரில், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேராவின் அறிவுறுத்தலுக்கமைவாக, மேற்படி பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஏ.பி. வீரசேன மேற்கொண்ட நடவடிக்கையின்போது, நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டிருந்த மேற்படி எட்டு நபர்களும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களைக் குற்றவாளிகளாக கண்ட நீதவான், மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.
இதன்போது, குற்றவாளிகள் அடுத்த முறையும் இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கு 05 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாத தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் நீதவான் எச்சரித்தார்.
குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை அவர்களிடம் மீள ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
30 minute ago
35 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
48 minute ago