Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 10 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண சபையில் கடமை புரியும் பொறியியலாளர்களின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பொறியியலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இதில் அரச தலைவர்கள் தலையிட்டு, நீதி பெற்றுத்தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, அல்- மீஸான் பௌண்டஷன், ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருக்கு மகஜர் வழங்கியுள்ளது.
அம்மகஜரில், இடமாற்ற சபையின் முடிவுகள் இரகசியமாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் இடமாற்ற சபையின் இடமாற்ற முடிவுகளை அவதானிக்கும் போது அது மிகுந்த கவலை தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவேற்றுத் தரத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகளில் தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொள்ளும் திறமையான பொறியியலாளர்களின் நிலை, சாதாரண ஊழியர்களின் இடமாற்ற செயற்பாட்டை விடக் கேவலமான முறையில் நடந்தேறியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாபன விதிக்கோவையின் அத்தியாயம் lll குறிப்பிடப்பப்படுள்ள இடமாற்றம் தொடர்பான எந்த விதி முறைகளும் முறையாக பின் பற்றப்பபடவில்லை என்பதுடன், இடமாற்ற சபையால் நிர்ணயிக்கப்பட்ட இடமாற்றத் திட்டம், இடமாற்றத்துக்குக்கு விண்ணப்பித்த அலுவலர்களுக்கு அறியப்படுத்தத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
எனவே, பொறியியலார்களின் இடமாற்ற செயற்பாடுகள், ஒரு தகுந்த குழுவின் மூலம் ஆராயப்பட்டு, சீர் செய்யப்பட ஆவன செய்யப்பட வேண்டுமென, அந்த மகஜரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
26 Feb 2021
26 Feb 2021