2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாஸாக்கள் எரிக்கப்படும் நிலைமை முடிவுக்கு வரும் சமிக்ஞைகள்!

A.K.M. Ramzy   / 2020 மே 10 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

முஸ்லிம்  ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற நிலைமை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரியவருவதாக, பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

 இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் உலக

நாடுகளுக்கே முன்மாதிரியாக உள்ளன. இவற்றின் காரணமாகதான் இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து நிற்கின்றது. இந்நாட்டு பிரஜைகள் என்கிற

வகையில் ஜனாதிபதியின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை களுக்கு முஸ்லிம் மக்களும் பேராதரவு வழங்கி வருகின்றனர்.

 ஆனால் உலகம் தழுவிய முஸ்லிம் மக்கள் அனைவரினதும் வாழ்க்கை சட்டமாக

இஸ்லாமிய மார்க்கமே இருந்து வருகின்றது. எமது மார்க்கத்தில் ஜனாஸாக்களை எரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தொற்று

அச்சம் காரணமாக ஜனாஸாக்கள் இங்கு எரிக்கப் பட்டபோது நாம் அனைவரும் இயலுமான வரை சகித்து கொண்டோம்.  இருப்பினும் ஆட்சேபனைகள்,

அதிருப்திகள் ஆகியவற்றை அரசாங்க உயர் மட்டத்துக்கு அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம்.

 உள்நாட்டின் சுகாதார மற்றும் வைத்திய துறை விற்பன் னர்களின் அறிவூட்டல்கள், வழிகாட்டல்கள் ஆகிய வற்றுக்கு அமையவே கொரோனா தொற்றாளர்களின்

உடலங்கள் எரிக்கப்படுகின்றன என்றும் இது முஸ்லிம்களை இலக்கு வைத்த இனவாத செயற்பாடு அல்ல என்றும் எமக்கு அரசாங்க தரப்பு பதிலுக்கு தெரிவித்த

வண்ணம் உள்ளது. கொரோனா கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்ற நிலையில் தற்போது ஊரடங்குகள் முடிவுக்கு வருகின்றன.

 இதேபோல கொரோனா தொற்று பரம்பலை ஊக்குவிக்க கூடியன என்று

சந்தேகிக்கப்பட கூடிய பல தொழில் துறைகள் மீதான தடைகள், மட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இவற்றை போலவே முஸ்லிம் ஜனாஸாக்களை

எரியூட்டுகின்ற நடவடிக்கைகள் இப்போதாவது முடிவுறுத்தி வைக்கப்படும் என்கிற நம்பிக்கை எமக்கு இருப்பதமாக, அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X