2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

’நாளைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்’

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.சி. அன்சார்

எமது அரசியல் செயற்பாட்டுக்கு, அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதால், வடக்கு, கிழக்கில் நாளை (28) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை - சம்மாந்துறை பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இன்று (27) செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “அரசாங்கமானது, எமது அரசியல் எதிர்ப்பை அடக்குவதற்காக, பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான தடைகள், முட்டுக்கட்டைகளை நீக்குவதற்காகவே, வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்குக் கோரப்பட்டுள்ளது. அதனால், முழுமையாக ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு, அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றேன்”என்றார்.

“கடந்த காலங்களில், அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் குறைகள் இருந்தமையை நாம் அறிந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கும் தயாராக இருந்தோம். ஆனால், இச்சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வதென்பது, பழைய நிலைக்குச் செல்வதற்குச் சமம். அதாவது, 18ஆவது திருத்தத்துக்கு மீண்டும் செல்வதென்பது, ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். அதனால் தான், புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கவுள்ளோம்”என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--