2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவிலில் மேலும் இருவருக்கு கொரோனா

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சகா

பொத்துவில் பிரதேசத்தில் இன் (28) மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொத்துவில் பிரதேசசெயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ், இவர்களோடு, பொத்துவில் பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளதெனவும் கூறினார்.

இதனால் அப்பகுதிகளில் மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
நேற்று கூடிய அவசர கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இவ்விருவரும் பொத்துவில் நகரத்தைச் சேர்ந்தவர்களெவும் அவர்களோடு தொடர்புடைய குடும்பத்தினர், சம்பந்தப்பட்டவர்கள் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, எதிர்வரும் 03 தினங்களுக்கு கரைவலை மீன்பிடிக்கு முற்றாக தடைவிதிப்பதாகத் தெரிவித்த அவர், பொத்துவில் உள்ள அனைத்து உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளாகவும் கூறினார்.

'தேவையில்லாமல் பொதுமக்கள் விட்டைவிட்டு வெளியேறக்கூடாது. ஓட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்க வேண்டும். களியாட்டம் மற்றும் ஒன்று கூடல் திருமண நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

'மரண வீடுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளை விழாக்களைத் தவிர்த்தல் அவசியம். வெளியூரிலிருந்து வருவோர் மற்றும் வியாபாத்துக்கு வருவோரினதும் விவரம் பதியப்பட்டு, அவர்களின் வருகையை பிற்போட அனுமதிக்கப்பட வேண்டும் ஆகழய தீர்மகனங்கள் எடுக்கப்பட்டுள்ளன' எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .