2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

முஸ்லிம் விவாக, காதி நீதிபதி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாக காணப்படும் முஸ்லிம் விவாக, காதி நீதிபதி பதவிக்கு, நீதிச்சேவை ஆணைக் குழுவினால்  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை, நிந்தவூர்ப்பற்று,  பொத்துவில், திருகோணமலை, கிண்ணியா, மூதூர், ஏறாவூர், ஒட்டமாவடி, புல்மோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருப்பதுடன்,  அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி ஒருவராக இருத்தல் வேண்டும். அல்லது முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனமொன்றால் வழங்கப்படும் சான்றிதழ் பெற்றுள்ள மௌலவி அல்லது கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அல்-ஆலிம் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராக இருத்தல் வேண்டும்.

சட்டத்தரணி ஒருவராக அல்லது அதற்கு சமமான தொழில்சார் தகைமையுடைய ஒருவராகவும் அல்லது ஓய்வுபெற்ற பதவி நிலை தரத்திலான அரச உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கத் தகைமையற்றவர்களாவர்.

விண்ணப்பதாரர் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் மற்றும் விசேடமாக இஸ்லாமியச் சட்டம் பற்றிய நல்ல அறிவுடையவராகவும் விவாகமானவராகவும் இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தினை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், காதிப் பிரிவு, நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம், த. பெ.இ- 573, கொழும்பு-12 எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .