Freelancer / 2026 ஜனவரி 13 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் த.வெ.க. தலைவர் விஜய்யின் கோரிக்கையை ஏற்ற சி.பி.ஐ, இன்றைய விசாரணையை ஒத்திவைத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பின் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவுபெற்றது. அவரிடம் இன்றும் விசாரணை நடத்தப்படவிருந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால் இன்றைய விசாரணைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விஜய்யிடம் நேற்று டில்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இன்னும் ஒரு நாள் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி இன்றைய விசாரணையில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு நேரில் ஆஜராக வேண்டும் என்ற சி.பி.ஐயின் அறிவுறுத்தலை விஜய் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் இன்று காலை அவர் சென்னை திரும்புகிறார். விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ள திகதியின் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
2 hours ago
8 hours ago
12 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
12 Jan 2026