2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

மொட்டின் கூட்டத்தில் அமளி துமளி

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, ம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட அமளி துமளியினால, மூவர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய காங்கிரஸ் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்திலேயே, இந்த அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பட்டாசுக்கொழுத்தி, கூட்டத்துக்குள் போட்டு, கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதையடுத்தே, முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் இதன்போது வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .