2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வழமைக்குத் திரும்பியது

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று (15) வழமைக்குத் திரும்பியுள்ளன என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக, செவ்வாய்க்கிழமை (13) முதல் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் உட்பிரவேசிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

மேற்படி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, கொரோனா வைரஸ் தொற்று இல்லையென அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, பல்கலைக்கழக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன எனவும் பல்கலைக்கழக உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X