2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

24 வயது பெண்ணுடன் 74 வயது நபர் திருமணம்: கடைசியில் ட்விஸ்ட்

Editorial   / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த 74 வயது ஆண் ஒருவர், 24 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமணத்தை செய்வதற்காக அந்த நபர், அவரின் இளம் மனைவிக்கு சுமார் ரூ.2 கோடியையும் கொடுத்துள்ளார். அப்படியிருக்க, அந்த திருமண வீட்டில் புகைப்படம், வீடியோ எடுத்தவர்களுக்கு உரிய தொகையை செலுத்தாமல் புதுமண தம்பதி காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாருக்கு பின்தான் இச்சம்பவம் பொதுவெளிக்கு வந்தது.

South China Morning Post ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, கிழக்கு ஜாவாவின் பாசிடன் ரீஜென்சியில் கடந்த அக்டோபர் 1ஆம் திகதி ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது என்றும் அந்நிகழ்வில் டர்மன் என்ற 74 வயதான மணமகன், 24 வயதான ஷெலா அரிகாவை மணமுடித்தார் என்றும் தெரிகிறது. டர்மனா, அரிகாவுக்கு மிகப்பெரிய மணமகள் பரிசாக வழங்கினார் என்றும் தெரிய வருகிறது. 

அதாவது, முதலில் பெண்ணுக்கு ரூ.60 லட்சம் அளவில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், இறுதியில் ரூ.1.8 கோடி அளவில் வழங்கப்பட்டதாம். மணமகள் மட்டுமின்றி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது ஒவ்வொருவருக்கும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

அப்படியிருக்க, அந்த ஜோடி புகைப்படம் எடுத்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுக்காமல் தப்பித்துச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஆன்லைனிலும் சில தகவல்கள் பரவி வந்துள்ளன. அதாவது, மணப்பெண் வீட்டார் கொடுத்த இருச்சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, 74 வயதான நபர் தப்பித்துச் சென்றுவிட்டார் என்றும், அவர் பெண்வீட்டாருக்கு கொடுத்த காசோலையும் போலியாக இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .