Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நம் வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை நமக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது கனவு என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
அதிகாலையில் காணும் கனவானது கட்டாயம் பலிக்கும் என்றும் சில சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியிருக்க கனவில் நல்ல விஷயங்கள் வந்தால் பரவாயில்லை.
அதுவே நமக்கு கெடுதல் நடப்பது போன்ற கனவை கண்டு விட்டோமேயானால், இருக்கும் மனநிம்மதியும் கெட்டுவிடும். சரி. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.
ஒருவருடைய கனவில் இவையெல்லாம் வந்தால், கட்டாயமாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருந்து விடுபட போவதாக சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளன.
உங்கள் கனவில் எவையெல்லாம் வந்தால் உங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் ஒருவருடைய கனவில் மகாலட்சுமி தேவி வந்தால் அவருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்ட போகின்றது என்பதை குறிக்கிறது. உங்களது கஷ்டம் அன்றே தீர்ந்தது என்று நிம்மதி அடைந்து கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் பால் நிரம்பி இருப்பது போல் கனவு வந்தால் நீங்கள் செல்வ செழிப்போடு வாழ போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
உங்களது கனவில் அழகான பூக்கள் வந்தால் உங்களுக்கு இருக்கும் தீராத கஷ்டம் ஒன்று உங்களை விட்டு விலகி செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கிறது.
முழு தேங்காயோ அல்லது உடைத்த தேங்காயோ உங்களது கனவில் வந்தால், சொத்து வாங்குவதைக் குறிக்கும். அதாவது நிலம் வீடு இப்படிப்பட்ட சொத்துக்கள் வாங்கலாம். அல்லது அந்த சொத்துக்கள் விற்று அதன்மூலம் உங்களுக்கு பணம் வர வாய்ப்பு உள்ளது என்பதை குறிக்கும்.
உங்கள் கனவில் பாம்பு வந்தால் அல்லது பாம்பு உங்களை கடிப்பது போல் கனவு வந்தாலோ நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியம் வெற்றி அடைய போகிறது என்பதையும், எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரப் போகிறது என்பதையும் குறிக்கும்.
உங்கள் கனவில் யானை வந்தாலோ அல்லது யானை சவாரி செய்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் போகிறது என்றும், உங்கள் கஷ்டங்கள் தீர போகிறது என்பதையும் குறிக்கும்.
நீங்கள் ஒரு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அந்த முயற்சியில் வெற்றியடைய போகிறீர்கள் என்பதையும் குறிக்கும்.
சில சமயம் கனவில் பெரிய பெரிய மரங்கள் தோன்றும். அது என்ன மரம் என்பதை சில பேரால் கண்டுபிடிக்க முடியாது. ஆலமரம், அரசமரம் போன்ற பெரிய மரங்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையானது முன்னேற்றப்பாதையில் செல்ல போகிறது என்பதை குறிக்கும்.
ஆமையை சில பேர் அபசகுனம் என்று சொல்லுவார்கள். ஆனால் ஆமையும் லட்சுமி தேவியின் அம்சம் தான். ஆமை கனவில் வந்தாலும் உங்களுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் வருமானம் வரப்போகிறது என்பதைத் தான் குறிக்கும்.
பெரிய அரண்மனைகள் உங்களது கனவில் வந்தால் நீங்கள் செய்யும் தொழில் வணிகம் வியாபாரம் எதுவாக இருந்தாலும் அது அதிக லாபத்தை ஈட்டித் தரப் போகிறது என்பதை குறிக்கும்.
உங்கள் கனவில் தானியங்கள் வந்தால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் அதிகமான லாபத்தை ஈட்ட போகிறீர்கள் என்பதை குறிக்கும். உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு, தன தானிய உணவு வகைகள் என்றும் குறையாது என்பதையும் இது குறிக்கிறது.
இப்படிப்பட்ட கனவுகள் உங்களுக்கும் வந்திருந்தால் கட்டாயமாக உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது தீர்ந்து, உங்களது வாழ்க்கை வெற்றிப்பாதையில் செல்லும். இதன்மூலம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வெற்றி அடையும்.
ஆக நீங்கள் விரைவில் கோடீஸ்வரராக எல்லா தகுதியும் கொண்டவர்கள் தான் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் முன்னேற இந்த ஒரு எண்ணம் போதாதா!
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago