Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 09 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் மேலும் நான்கு பேருக்கு COVID -19 பாதிப்பு இருப்பது இன்று உறுதியானதால் இதுவரை COVID -19-ஆல் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று வரை 39 பேர் COVID -19-ஆல் பாதிக்கப்பட்டனர். கேரளாவில் நேற்று முன்தினம் ஐந்து பேருக்கு COVID -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இத்தாலி சென்று விட்டு திரும்பினார்கள். அவர்களோடு அவர்களது உறவினர்கள் இரண்டு பேருக்கும் இந்த வைரஸ் தாக்கி இருந்தது.
இந்நிலையில் COVID -19-ஆல் மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. ஜம்மு காஷ்மிர், டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு COVID -19 தாக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மிரைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவருக்கு COVID -19 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மிரில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான முதல் நபர் ஆவார். அவர் அண்மையில் ஈரான் சென்று வந்தார். COVID -19 உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இதே போல் டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் COVID -19 பாதிப்பு இருக்கிறது. அதன் முழு விவரமும் வெளியாகவில்லை. டெல்லியில் ஏற்கனவே 2 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். தற்போது இது மூன்றாக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்திலும் ஒருவருக்கு COVID -19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago